பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தலைவர் ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் கார்த்திகேயன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், பி.எஸ்.என்.எல்.க்கு 4-ஜி, 5-ஜி உடனடியாக வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 3-வது ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். புதிய பதவி உயர்வு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.