பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனிதசங்கிலி போராட்டம்

வேலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-01 16:59 GMT

வேலூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம், ஓய்வூதியர்கள் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக பகுதியில் மனிதசங்கிலி போராட்டம் நேற்று நடந்தது.

போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் மாரிமுத்து, ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் லோகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார்.

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும். 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஊதிய உயர்வு செய்யப்படவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். 15 ஆண்டுகளாக பணி உயர்வு வழங்காததை உடனடியாக வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி, 5 ஜி சேவை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்