பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் முகாம்

நெல்லையில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் முகாம் 2-ந்தேதி நடைபெற உள்ளது.

Update: 2022-10-31 19:28 GMT

மத்திய விஜிலென்ஸ் கமிஷனின் வழிகாட்டுதலின்படி, பி.எஸ்.என்.எல். நெல்லை, தூத்துக்குடி செயல்பாட்டு பகுதியில் கடந்த 31-ந்தேதி முதல் வருகிற 5-ந்தேதி வரை விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம் பின்பற்றப்படுகிறது. 'வளர்ந்த தேசத்திற்கு ஊழல் இல்லாத இந்தியா' என்ற கருப்பொருளில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய பி.எஸ்.என்.எல். பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெல்லை வணிகப்பகுதி சார்பில், வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம், நெல்லை வண்ணார்பேட்டை பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மைய வளாகத்தில்  2-ந்தேதி (புதன்கிழமை), தூத்துக்குடி டபிள்யு.ஜி.சி. சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்தில் வருகிற 5-ந்தேதியும் (சனிக்கிழமை) நடக்கிறது.பி.எஸ்.என்.எல். நெல்லை வணிகப்பகுதி மொபைல் வாடிக்கையாளர்களுக்கு பி.வி.397/ 797/ 1198/ 1999 போன்ற பல்வேறு வருடாந்திர பிரீபெய்ட் சிம்களை வழங்குகிறது. பாரத் பைபர் (எப்.டி.டி.எச்.) மூலம் புதிய பிராட்பேண்ட் இணைப்பு, துண்டிக்கப்பட்ட லேண்ட்லைன்/ பிராட்பேண்ட் இணைப்பை மீண்டும் பைபர் (எப்.டி.டி.எச்.) மூலம் இணைத்தல், லேண்ட்லைன்/ பிராட்பேண்ட் இணைப்பை எப்.டி.டி.எச். ஆக மாற்றுதல் ஆகியவை முகாமின்போது வழங்கப்படுகிறது. மேலும் கேபிள்கள் மூலம் வேலை செய்யும் லேண்ட்லைன்/ பிராட்பேண்டை எப்.டி.டி.எச். ஆக மாற்றுவதற்கு முதல் 6 மாத பில்களுக்கு ரூ.200 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எப்.டி.டி.எச். அமைப்பு கட்டணம் ரூ.500 முற்றிலும் தள்ளுபடி முகாமின்போது வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை நெல்லை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பிஜி பிரதாப் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்