வால்பாறையில் தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பு

வால்பாறையில் தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2022-06-16 14:14 GMT

வால்பாறை

வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வால்பாறை மலைப்பகுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக பயன்படுத்த கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. வால்பாறை பகுதியில் உள்ள 89 வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட 280 மின்னணு வாக்கு எந்திரம் மற்றும் வாக்களித்ததை உறுதி செய்யும் விவிபேட் எந்திரம் 280 ஆகியவைகள் தேர்தல் முடிந்து இதுநாள் வரை வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. இந்த மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் வால்பாறை தாசில்தார் விஜயகுமார் தலைமையில் சரிபார்த்து லாரிகளில் ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன் கோவை மாவட்ட மின்னணு வாக்கு எந்திர மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் வால்பாறை தேர்தல் துணை தாசில்தார் மோகன்பாபு, ஆனைமலை தேர்தல் தனித்தாசில்தார் முருகராஜ் மேற்பார்வையில் வால்பாறை, ஆனைமலை வருவாய் துறை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்