அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின்போது வாலிபரை தாக்கிய சகோதரர்கள் கைது
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின்போது வாலிபரை தாக்கிய சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்
மதுரை சிக்கந்தர்சாவடி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 23). இவர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பார்க்க வந்திருந்தார். மேலும் இவர் மாடுகள் வெளியேறும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஜல்லிக்கட்டு மாட்டுடன் வந்த 2 பேர் அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மாரிச்செல்வத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அண்ணாநகர் முந்திரி தோப்பை சேர்ந்த சகோதரர்கள் இளங்கோ (வயது 22), அன்பு (21) ஆகியோரை கைது செய்தனர்.