தம்பியை தாக்கிய அண்ணன் கைது
பரப்பாடியில் தம்பியை தாக்கிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
இட்டமொழி:
பரப்பாடி வடக்குத் தெருவை சேர்ந்தவர் டேனியல் (வயது 92), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருடைய மகன்கள் ராஜாராம் சாமுவேல் (57), மோகன்ராஜ் (55). ராஜாராம் சாமுவேல் தனது தந்தையின் பென்சன் பணத்தை தான் மட்டும் எடுத்து அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இதுகுறித்து மோகன்ராஜ், தனது அண்ணனிடம் நீ மட்டும் எப்படி பென்சன் பணம் முழுவதையும் எடுக்கலாம் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ராஜாராம் சாமுவேல், மோகன்ராஜை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்து கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மோகன்ராஜ் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் நாககுமாரி விசாரணை நடத்தி ராஜாராம் சாமுவேலை கைது செய்தார்.