அரசு பஸ் மோதி அண்ணன்-தம்பி படுகாயம்
தேனியில் அரசு பஸ் மோதிய விபத்தில் அண்ணன்-தம்பி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெரியகுளம் வடகரை வடக்கு பாரஸ்ட்ரோடு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 58). நேற்று முன்தினம் இவர் தனது அண்ணன் ராஜேந்திரனுடன் (60) தேனி புறவழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அங்குள்ள வனத்துறை நாற்றுப்பண்ணை அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ், கருப்பையா ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் கருப்பையா, ராஜேந்திரன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.