தங்கையின் வினோத ஆசையை நிறைவேற்றிய அண்ணன்

தங்கையின் வினோத ஆசையை அண்ணன் நிறைவேற்றினார்.

Update: 2022-12-11 17:19 GMT

மானாமதுரை,

அண்ணன்-தங்கை பாசத்திற்கு ஈடுஇணை எதுவும் இல்லை. அடித்தாலும், பிடித்தாலும் பாசத்திற்கு குறை இருக்காது. மானாமதுரையில் நடந்த திருமணத்தில் தன் தங்கை ஆசைப் பட்டதெல்லாம் நிறைவேற்றி அசத்தி உள்ளார் ஒரு பாசக்கார அண்ணன். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த விரேஸ்மாவுக்கு நேற்று திருமண நடைபெற்றது. இந்த திருமண விழாவில் விரேஸ்மாவின் அண்ணன் ராயல் தங்கையின் ஆசைப்படி சிறுவயது முதல் வளர்த்த ஜல்லிகட்டு காளை, சண்டை கிடா, கன்னி நாய்கள், சண்டை சேலை மேடைக்கு அழைத்து வந்து புகைப்படம் எடுத்து கொடுத்துள்ளார். மேலும் வீட்டில் வளர்த்த கன்னிநாய்கள், சண்டை சேவலை சீர்வரிசை பொருட்களுடன் சீதனமாக வழங்கி அசத்தி உள்ளார். இதைகண்ட திருமணத்திற்கு வந்தவர்கள் அண்ணன்-தங்கை பாசத்திற்கு எப்போதும் அளவில்லை என்று வாழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்