குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.
வீணாகும் குடிநீர்
பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு கடந்த பல மாதங்களாக குழாய் உடைந்து குடிநீர் வீணாகி கொண்டிருக்கிறது. இதனால் சாலையும் பழுதடைந்து விட்டது.
இதற்கிடையில் விபத்துகளை தடுக்க அந்த இடத்தில் தடுப்புகளை வைத்து உள்ளனர். குடிநீர் சாலையில் ஆறாக ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே மார்க்கெட் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நடவடிக்கை இல்லை
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இது தவிர ஆனைமலை, கேரளாவுக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். ஆனால் இந்த சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் வெளியேறுவதால் சாலை பழுதடைந்து காணப்படுகிறது.
விபத்து ஏற்படுவதை தடுக்க தடுப்புகள் வைத்து உள்ளனர். ஆனால் அதிகாரிகள் குழாயை சீரமைக்க முன் வரவில்லை. முதலில் லேசான கசிவு இருக்கும் போது சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தால் பெரிய அளவில் உடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விடுவதால் குடிநீர் அதிகமாக வீணாகுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.