குழாய் உடைந்து வீணாக செல்லும் குடிநீர்
நெல்லை டவுனில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சென்றது.
நெல்லை டவுன் குன்னத்தூர் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. அப்போது அங்கு உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அதில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் வீணாக ஓடி, கழிவு நீருடன் கலந்து செல்கிறது. குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது.
அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகிறார்கள். எனவே குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.