வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

சிவகாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.

Update: 2022-10-07 18:45 GMT

சிவகாசி,

சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட ஆலமரத் துப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 61). இவர் அப்பையநாயக்கன்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று இருந்தார். அப்போது இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற முதலிப்பட்டியை சேர்ந்த மாரிச்சாமி, தினேஷ், குமார் ஆகியோர் வீட்டில் இருந்த 1½ பவுன் நகை, ரூ.10,500 ரொக்கபணம் மற்றம் ரூ.8 லட்சம் மதிப்புள்ள புரோ நோட்டுக்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து வெங்கடாசலபதி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்