வீட்டு பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு
உளுந்தூா்பேட்டை அருகே வீட்டு பூட்டை உடைத்து 4 பவுன் நகையை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன் மகள் தமிழரசி (வயது 23). சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்துபார்த்தபோது, வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதில் பதறிய அவர், வீட்டுக்குள் சென்றுபார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் நகைகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. திருடுபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.