வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டுபோனது.
அரியலூர் மாவட்டம், கடாரம் கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி(வயது 66). இவரது மகள் விஜய சரஸ்வதி. இவர் அரியலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது மகளை பார்ப்பதற்காக தங்கமணி கடந்த 24-ந் தேதி அரியலூர் சென்றிருந்தார். இந்நிலையில் பூட்டி இருந்த வீடு திறந்து இருப்பதாக தங்கமணிக்கு அவரது அண்ணன் கலியமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடாரங்கொண்டான் கிராமத்திற்கு வந்த தங்கமணி வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவில் இருந்த 3 பவுன் சங்கிலி உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தங்கமணி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.