வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள்-பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள்-பணம் திருட்டுபோனது.

Update: 2022-09-03 19:14 GMT

வேப்பந்தட்டை:

டிரைவர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் கீழ்கோடி தெருவை சேர்ந்தவர் திருவேங்கடம்(வயது 40). நெல் அறுவடை எந்திர டிரைவாக வேலை பார்த்து வருக்கிறார். இவருக்கு அந்த பகுதியில் அருகருகே 2 வீடுகள் உள்ளன. அதில் ஒரு வீட்டில் திருவேங்கடத்தின் மனைவி பரிமளா, தாய் விஜயா மற்றும் குழந்தைகள் படுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை பார்த்தபோது அவர்கள் படுத்திருந்த வீட்டின் அருகில் உள்ள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இந்த திருட்டு சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் நின்ஜா மற்றும் தடய வியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்