ஆவடி: மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் கொள்ளை

ஆவடியில் மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-08-28 13:00 GMT

ஆவடி:

ஆவடி ஸ்ரீ தேவி நகர், வ.ஊ.சி.தெருவில் வசிப்பவர் பிரபு (வயது 32). இவர் கடந்த 6 ஆண்டுகளாக ஆவடி ஜே.பி.எஸ்டேட் முதல் பிரதான சாலையில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு 10:30 மணிக்கு வியாபாரம் முடிந்து கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை 6:30 மணிக்கு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கடையின் பூட்டு உடைந்திருப்பதாக ஸ்ரீதருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து ஸ்ரீதர் கடைக்கு சென்று பார்த்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கடையின் உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திருந்த ரூ. 3 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் ஆவடி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்