2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு
திருவட்டாரில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு போனது.
திருவட்டார்:
திருவட்டாரில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு போனது.
திருவட்டார் பஸ்நிலையம் அருகில் மளிகை கடை நடத்தி வருபவர் விஜயன் (வயது 48). இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலையில் கடையை திறக்கச் சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், கடையில் வைத்திருந்த ரூ.1000 மற்றும் சில பொருட்களும் மாயமாகி இருந்தன. யாரோ மர்ம நபர் பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதேபோல், திருவட்டார் காங்கரையில் பத்ரோஸ்(70) என்பவரது பழக்கடையிலும் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.800 மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் திருடப்பட்டு இருந்து தெரியவந்தது. இந்த சம்பவங்கள் குறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சிறப்பு சப்-இஸ்பெக்டர் ஜெயராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள மணத்திட்டை இசக்கிஅம்மன் கோவில் உண்டியல் பணம் மற்றும் ராமன்கோணம் அய்யா நிழல்தாங்கல் அருகில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.