வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

ஜோலார்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகையை திருடிச்சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-09 17:07 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள திரியாலம் டி.வி. துரைசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 50), விவசாயி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டிக்கொண்டு விவசாய நிலத்தில் விளைந்த மிளகாய் பறித்து சோமநாயக்கன்பட்டி ரெயில்வே கேட் அருகே விற்பதற்காக சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து மோகன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மர்ம நபர்கள் காரில் வந்து வீட்டின் கதவை பூட்டை உடைத்து நகை திருடி சென்றது தெரியவந்தது மேலும் அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்