அரசு பள்ளியின் கதவை உடைத்து மடிக்கணினி திருட்டு
ஒரத்தநாடு அருகே அரசு பள்ளியின் கதவை உடைத்து மடிக்கணினியை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீச்சி தேடி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாட்டை அடுத்துள்ள புதூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 5-ந்தேதி இரவு இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த மடிக்கணினி மற்றும் புரஜெக்டரை திருடி சென்று விட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை சினேகலதா கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பள்ளியின் கதவை உடைத்து மடிக்கணினியை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரசு பள்ளியின் கதவை உடைத்து மடிக்கணினி திருடப்பட்ட சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.