காட்டுப்பகுதிக்கு அழைத்து ெசன்று வாலிபரை வெட்டிக்ெகான்ற 5 பேர் கைது
காட்டுப்பகுதிக்கு அழைத்து ெசன்று வாலிபரை வெட்டிக்ெகான்ற 5 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
சாத்தூர்
சாத்தூர் அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 24). இவர் ஆடு மேய்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் பெருமாள்பட்டி அருகே காட்டுப்பகுதியில் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகொலையாக இருக்கலாம் என போலீசார் கருதினர்.
இதையடுத்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் ஆலோசனையின்படி போலீஸ் துணை சூப்பிரண்டு வினோஜி, இன்ஸ்பெக்டர் செல்ல பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
வாலிபர் மாரியப்பனுக்கு, தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. அதேநேரத்தில் தூத்துக்குடியை சேர்ந்த தர்மராஜ்(30) என்பவருக்கும் அந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அப்போது மாரியப்பன், தர்மராஜை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தர்மராஜ் தனது நண்பர்கள் நென்மேனி பொட்டல்பச்சேரியைச் சேர்ந்த மனோஜ்குமார் (20), எட்டயபுரம் தாலுகா பீக்கிலிப்பட்டியை சேர்ந்த முனியாண்டி(57), எப்போதும்வென்றான் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து மாரியப்பனை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக மாரியப்பனை சமரசம் செய்து கொள்ளலாம் என அழைத்தனர். இதை நம்பி வந்த மாரியப்பனை அங்குள்ள காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று மது அருந்தினர். அங்கு அவருக்கு அதிக அளவில் மதுவை குடிக்க வைத்துள்ளனர். இதனால் அவர் மதுபோதையில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர்கள் 5 பேரும் சேர்ந்து அவரை வெட்டி கொலை செய்துள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர். இச்சம்பவம் குறித்து தர்மராஜ் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.