ஆபத்தான நிலையில் நடைபாலம்
கூத்தாநல்லூர் அருகே கோரையாற்றின் குறுக்கே ஆபத்தான நிலையில் நடைபாலம் உள்ளதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கூத்தாநல்லூர் அருகே கோரையாற்றின் குறுக்கே ஆபத்தான நிலையில் நடைபாலம் உள்ளதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோரையாற்றில் நடைபாலம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள விழல்கோட்டகம் கிராமத்தில் கோரையாற்றின் குறுக்கே 30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபாலம் கட்டப்பட்டது. இந்த நடைபாலத்தை விழல்கோட்டகம், வெள்ளக்குடி, வாழச்சேரி, அதங்குடி, சித்தாம்பூர், மரக்கடை, பொதக்குடி, கற்கோவில், கோரையாறு, லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கிராமப்புற பள்ளி மாணவர்கள் இந்த பாலத்தை கடந்து தான் கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, மன்னார்குடி, தேவங்குடி போன்ற பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும்.
வலுவிழந்ததால் அச்சம்
இந்த நிலையில் நடைபாலம் கடந்த சில ஆண்டுகளாக சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பாலத்தின் தடுப்பு தூண்கள் இடிந்து பாலம் வலுவிழந்து விட்டதாகவும், பாலத்தின் இடை இடையே தடுப்பு கம்பிகள் இல்லை என்றும் கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சேதம் அடைந்து காணப்படும் இந்த பாலம், மிகவும் குறுகலானதாகவும் உள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சேதம் அடைந்த நடைபாலத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிதாக அகலமான சிமெண்டு பாலம் கட்டித்தர என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.