திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-24 20:52 GMT

காதல் திருமணம்

திருச்சி உறையூர் செவந்தி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவருடைய மனைவி கண்ணம்மாள் (வயது 46). இவர்களுடைய மகள் ஹேமாவதி (20). இவர், சீனிவாசநகரை சேர்ந்த சிவசுப்பிரமணியனை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் ஹேமாவதி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவசுப்பிரமணியன், இது பற்றி ஹேமாவதியின் தாய் கண்ணம்மாளிடம் தெரிவித்துள்ளார். அவரும் தனது மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது, ஹேமாவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிதுநேரத்தில் வீடு திரும்பிய சிவசுப்பிரமணியன் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த கண்ணம்மாள் ஸ்ரீரங்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், ஹேமாவதிக்கு திருமணமாகி 4 மாதமே ஆனதால் கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்