செங்கல் சூளை தொழிலாளி மர்ம சாவு
திட்டக்குடி அருகே செங்கல் சூளை தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
திட்டக்குடி,
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 31). கூலி தொழிலாளியான இவர் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியில் தங்கி, அங்குள்ள தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஏழுமலை செங்கல் சூளை பகுதியில் வசித்து வந்த கூரை கொட்டகையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைபார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஏழுமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.