ரெயில் முன் பாய்ந்து கொத்தனார் தற்கொலை

ரெயில் முன் பாய்ந்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-26 21:25 GMT

லால்குடி:

லால்குடி அருகே மாந்துறை பகுதியை சேர்ந்த பாஸ்கரின் மகன் ராஜா(வயது 34). கொத்தனார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் ராஜாவின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 மாதங்களா அவரை பிரிந்து சென்று, தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ராஜா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு லால்குடி அருகே மேலவாளாடி ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள தண்டவாளத்தில் சென்ற ரெயில் முன் ராஜா பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு சென்று, ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் ரெயில்வே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்