கர்ப்பிணிகளுக்கு தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கர்ப்பிணிகளுக்கு தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-08-01 18:32 GMT

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு சத்துவாச்சாரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் கொண்ட கண்காட்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வியா தலைமை தாங்கினார். சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கண்மணி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக தனியார் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் நர்மதா கலந்து கொண்டு ஊட்டச்சத்து உணவுகள் குறித்து கர்ப்பிணிகளுக்கு விளக்கி கூறினார்.

இதில் தாய்ப்பால் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவம், தாய்ப்பாலின் நன்மைகள், கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துக்கள் குறித்து விளக்கும் வகையில் ஊட்டச்சத்து உணவுகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்