மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம்
வள்ளியூரில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடந்தது.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் சென்டிரல் ரோட்டரி சங்கம், இன்னர்வீல் சங்கம், மருத்துவ சங்கம், காவேரி மருத்துவமனை இணைந்து பெண்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாமை புதூர் கிங்ஸ் பள்ளியில் நடத்தியது. ரோட்டரி சங்க தலைவர் மற்றும் மேக்ரோ கல்லூரி நிறுவன தலைவர் பொன் தங்கதுரை ஆலோசனையின் பேரில் நடைபெற்ற முகாமுக்கு பள்ளி தாளாளர் முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுனர் நவமணி தலைமை தாங்கினார். இன்னர்வீல் சங்க தலைவர் ஜென்சி, வள்ளியூர் மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் ஜேக்கப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர்கள் பிந்துகுமார், குமரமுருகன் ஆகியோர் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை நடத்தப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. முத்துகிருஷ்ணன், செயலர் சுதிர் கந்தன், டாக்டர் செல்வேந்திரன், ஹரிஷ், தினேஷ் கண்ணா, ஜெயந்தி செல்லத்துரை, டாக்டர் சியாமளா, முத்துகிருஷ்ணன், முன்னாள் தலைவர் பிரபா நவமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.