கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

Update: 2023-10-22 18:45 GMT

கோலியனூர் வட்டத்தில் உள்ள கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளஞ்சிவப்பு அக்டோபர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியாபத்மாசினி தலைமை தாங்கி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து பேசினார். மார்பக புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றினர். மேலும் மார்பக புற்றுநோய் பரவியல் மற்றும் கிராமப்புற பெண்களை பாதுகாப்பது குறித்து டாக்டர் நிஷாந்த் பேசினார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் புற்றுநோய் தடுப்பு பங்களிப்பு குறித்து பல் மருத்துவர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் டாக்டர் பிரசன்னாதேவி பேசினார். தொடர்ந்து கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்பக புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்து அவர்களுக்கு ஊட்டச்சத்து கருவிகளை டாக்டர்கள் மெரீனா, மேனகா வழங்கினர். அரசு சாரா அமைப்புகளின் மூலம் அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வின் மூலம் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்