வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டுபோனது.
காட்டுப்புத்தூர்:
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே மேக்கல்நாயக்கன்பட்டி ஈ.சி.ஆர். நகரில் வசிப்பவர் பாக்கியராஜ்(வயது41). இவர் கடந்த 30-ந் தேதி இரவு தனது சொந்த ஊரான நாகையநல்லூரில் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது. மேலும் வீட்டிற்குள் உள்ள பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 கிராம் தங்க தாலி காசு மற்றும் 1¾ பவுன் எடை உள்ள சங்கிலி மற்றும் டாலர் என மொத்தம் 2¾ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாக்கியராஜ் கொடுத்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.