வீட்டின் பூட்டை உடைத்து தங்க காசு திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து தங்க காசு திருடப்பட்டது.

Update: 2022-12-28 18:47 GMT

மண்ணச்சநல்லூர் பூமிநாதன் நகரில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டில் திருட முயற்சி செய்தனர். 2 வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கு பணம், நகை எதுவும் இல்லாததால் அடுத்து அதே பகுதியில் உள்ள ஏசி மெக்கானிக் வேலை பார்க்கும் கார்த்திகேயன் (வயது 35) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே அலமாரியில் வைக்கப்பட்டிருந்த அரை பவுன் தங்க காசை திருடி சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொர்பாக வழக்குப்பதிவு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்