வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
வீரசோழன் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடி சென்றனர்.
காரியாபட்டி,
வீரசோழன் அருகே உள்ள ஒட்டங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 50). இவரும், இவருடைய மனைவியும் காலையில் வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுப்பையா அளித்த புகாரின் பேரில் வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.