வீட்டின் பூட்டை உடைத்து பணம்- மடிக்கணினி திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து பணம்- மடிக்கணினி திருட்டு போனது.

Update: 2022-10-16 22:35 GMT

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திராநகரை சேர்ந்தவர் நூர்ஜகான்(வயது 58). இவர் வாடகை வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இவர் கடந்த 13-ந் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். பின்னர் சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்குள் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அவரது வீட்டில் இருந்த ரூ.84 ஆயிரம், மடிக்கணினி, ஆதார்கார்டு, ரேஷன்கார்டு ஆகியவை திருட்டு போய் இருந்தது. இது குறித்து நூர்ஜகான் அளித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்