வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை - மோட்டார் சைக்கிள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிய ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-07-09 19:45 GMT

கொள்ளிடம் டோல்கேட், ஜூலை.10-

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிய ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பூட்டை உடைத்து...

திருச்சி நெ.1டோல்கேட் அருகே உள்ள பழூர் ஸ்ரீவாரி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் லட்சுமிநாராயணன் (வயது 54). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று காலை லட்சுமிநாராயணன் உறவினர் ஒருவர் வீட்டை பார்ப்பதற்காக சென்றபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து லட்சுமிநாராயணனிடம் அவர் செல்போனில் தகவல் தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து படுக்கை அறையில் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க வளையல் மற்றும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளையும் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்