வீட்டின் கதவை உடைத்து பணம்-ஆவணங்கள் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து பணம்-ஆவணங்கள் திருட்டு போனது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, டி.களத்தூர் கவுண்டர் தெருவை சேர்ந்த சுப்பையா மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டி விட்டு அருகே வசிக்கும் மகள் சசி வீட்டிற்கு தூங்க சென்றார். பின்னர் அவர் நள்ளிரவு தனது வீட்டிற்கு திரும்பினார். இதையடுத்து அவர் நேற்று அதிகாலை தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் வீட்டினுள் சென்று பார்த்த போது, பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டு பத்திரம், வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் திருட்டு போயிருந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.