ஆழியாறு தடுப்பணையில் தடையை மீறி குளித்து மகிழும் சுற்றுலா

ஆழியாறு தடுப்பணையில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். எனவே அங்கு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

Update: 2022-06-05 16:01 GMT

பொள்ளாச்சி

ஆழியாறு தடுப்பணையில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். எனவே அங்கு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தடுப்பணை

பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணை, பூங்கா, குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற இடங்களுக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.

தற்போது மழை பெய்யாததால் வறட்சி நிலவுகிறது. இதனால் குரங்கு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட வில்லை.

இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஆபத்தான ஆழியாறு தடுப்பணையில் குளிக்க பொதுப்பணித்துறை மற்றும் ஆழியாறு போலீசார் தடை விதித்து உள்ளனர். இதற்கு தடுப்ப ணையில் புதைமணல், ஆழமான சுழல் இருப்பதே காரணம்.

சுற்றுலா பயணிகள்

ஆனாலும் தடையை மீறி ஆழியாறு தடுப்பணையில் நேற்று நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இதை போலீசார் கண்காணித்து உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

இது குறித்து உள்ளூர் பொதுமக்கள் கூறியதாவது:-

ஆழியாறு தடுப்பணை புதைமணலில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர். கடந்த மாதம் கூட 3 பேர் தடுப்பணையில் சிக்கி உயிரிழந்தனர். இதை அறியாமல் சுற்றுலா பயணிகள் ஆர்வமு டன் தடுப்பணையில் குளிக்கின்றனர். எனவே தடுப்பணையில் ஆழம் மற்றும் சுழல் உள்ள பகுதிகள் குறித்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

கண்காணிப்பு

மேலும் தடுப்பணை பகுதியில் ஆழியாறு போலீசார் கண்கா ணிப்பை பலப்படுத்த வேண்டும். அதோடு தடுப்பணை பகுதி யில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். இதற்காக கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்