கடை பூட்டை உடைத்து ரூ.22 ஆயிரம் திருட்டு
குளச்சலில் கடை பூட்டை உடைத்து ரூ.22 ஆயிரம் திருடி சென்றவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளச்சல்:
குளச்சலில் கடை பூட்டை உடைத்து ரூ.22 ஆயிரம் திருடி சென்றவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளச்சல் மார்க்கெட் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 45). இவர் களிமார் பாலம் அருகில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த ரூ.22 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜேஷ் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.