காலை உணவு திட்ட பயிற்சி

திருமருகல் அருகே காலை உணவு திட்ட பயிற்சி நடந்தது.

Update: 2023-05-23 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சி பொறக்குடியில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட 2 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கி நடைபெற்றது.இந்த பயிற்சி முகாமில் ஏர்வாடி, இடையாத்தங்குடி, கொங்கராயநல்லூர், அம்பல், திருப்புகலூர் பகுதிகளைச் சேர்ந்த 12 பள்ளிகளுக்கு தலா 3 பேர் வீதம் 36 பேர் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி தலைமை தாங்கினார்.வட்டார இயக்க மேலாளர் பாரதிதாசன் முன்னிலை வகித்தார்.இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.இதில் ஏர்வாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் விஜய கணபதி, வார்டு உறுப்பினர் சுகுணா சரவணன் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்