பள்ளிகளில் காலை சிற்றுண்டி: டாக்டர் ராமதாஸ், கமல்ஹாசன் வரவேற்பு

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு டாக்டர் ராமதாஸ், கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2022-07-27 23:17 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் 1,545 தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அறிவுப்பசி தேடி அரசு பள்ளிகளுக்கு வரும் ஏழை குடும்ப மாணவர்களின் வயிற்றுப்பசியை தீர்ப்பதற்கான இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கைகளில் தவறாமல் இடம் பெற்ற இந்த அறிவிப்பு நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இதனை அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். காலை உணவுடன் பாலும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் பாராட்டுகிறது.

அனைத்து வகுப்பு மாணவர்கள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தலாம். மேலும், சரியான அளவில், தரமான முறையில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படுவதை உறுதிசெய்ய உரிய கண்காணிப்பு ஏற்பாடுகளை செய்வதும் அவசியம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்