செங்கல் உற்பத்தி தொழில் கடுமையாக பாதிப்பு

செங்கல் உற்பத்தி தொழில் கடுமையாக பாதிப்பு

Update: 2022-09-06 11:56 GMT

தாராபுரம்

தென் மேற்கு பருவமழை காரணமாக தாராபுரத்தில் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால் கூலித் தொழிவாளிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

செங்கல் சூளைகள்

தாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள வட்டார பகுதியான தாராபுரம் கொண்டரசம்பாளையம், திருமலை பாளையம், தளவாய் பட்டினம், உள்ளிட்ட பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 50 லட்சம் செங்கற்கள் வரை நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த செங்கல்கள் கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் உள்மாவட்டத்தில் திருப்பூர் பல்லடம், அவினாசி, ஆகிய பகுதி விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

இதனை உற்பத்தி செய்ய மதுரை, கடலூர், ராமநாதபுரம், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் 50 நாட்கள் குறைவாக இருக்கும் நிலையில் முன்கூட்டியே தாராபுரம் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை போனஸ் மற்றும் முன் பணம் பெற்று சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் இந்த ஆண்டு ஊதியம் கூட பெற முடியாத சூழ்நிலையில் தவிக்கின்றனர்.

செங்கல் உற்பத்தி பாதிப்பு

தாராபுரம் பகுதியில் தற்போது மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சேம்பர் மற்றும் சூழலில் செங்கல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் செங்கல்கள் மழையால் சேதம் அடைந்து உள்ளது.

இது குறித்து உரிமையாளர்கள் கூறியதாவது:-

தாராபுரம் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் தொடர் மழை பெய்தபோது செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது செங்கல் விலை ரூ.7-க்கு விற்பனையான செங்கல் தற்போது கல் ஒன்று 10 ரூபாயை கடந்து விற்பனை செய்தாலும் செங்கல் தயாரிப்பு இல்லை. இதே நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு நீடித்தால் செங்கல் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.தற்போது தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் கூலி ஆட்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இதனை நம்பியுள்ள கூலித் தொழிலாளர் வேலை இழந்து உள்ளனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்