கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு

கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

Update: 2022-06-03 18:01 GMT

கூடலூர் நகர்பகுதி மக்களுக்கு லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது கூடலூர் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூடலூர் வடக்கு காளியம்மன் கோவில் பகுதியில் இருந்து தெற்கு மந்தை வாய்க்கால் பாலம் வரை சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. சாலையின் இருபுறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு. சாலையோரத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டு வருகிறது.

இதில் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையை தோண்டும் பணி நடந்தது. அப்போது கூடலூர் நகர பகுதிக்கு வரும் லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்லும் அவலநிலையை கண்ட பொதுமக்கள் வேதனையடைந்தனர். மேலும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதேபோல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர்.காலனி அருகே கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்