கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-04-26 18:20 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரி சண்முகசுந்தரம் நேற்று முன்தினம் வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு தனது வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை பூஜைக்காக கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பாா்த்தபோது அங்கிருந்த உண்டியலை உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்