கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 9-ந் தேதி வழக்கமான பூஜைகளை முடித்து விட்டு கோவில் நிர்வாகி ராஜேந்திரன் (வயது 55) கோவிலை பூட்டி விட்டு சென்றார். 10-ந் தேதி அதிகாலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்த போது வெளிப்புற கேட்டின் பூட்டை கம்பியால் நெம்பி உடைக்கப்பட்டு, கோவிலின் உள்ளே இருந்த 2 அடி உண்டியல் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பணம் திருட்டு போனது. இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.