கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நெல்லை தாழையூத்து ராஜவல்லிபுரம் செப்பறை கோவில் அருகே ஸ்ரீநல்லதம்பி தர்மதாஸ்தா கோவில் உள்ளது. இக்கோவிலில் அதே பகுதியை சேர்ந்த ராமகம்பர் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று காலையில் வழக்கம் போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் முன்பக்க கிரீல் கேட் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள உண்டியலை மர்மநபர் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோவில் கமிட்டி தலைவரான கே.டி.சி. நகரை சேர்ந்த சண்முகவேலாயுதம் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.