கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டுப்போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை வில்லாபுரம் வீட்டுவசதிவாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 40). இவர் வில்லாபுரம் பகுதியில் உள்ள நாகம்மாள் கோவில் நிர்வாகியாக உள்ளார். சம்பவத்தன்று இரவு கோவிலை அடைத்து விட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் சுமார் 5 ஆயிரம் ரூபாய் இருக்கும். அந்த ரூபாயை யாரோ மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.