கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
தக்கலை:
தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சியில் விநாயகர்கோவில் உள்ளது. இங்கு கடந்த 4-ந்தேதி இரவு ஆயுதபூஜை விழா முடிந்ததும் 11.30 மணியளவில் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் மாலையில் பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது, கோவிலின் வெளிபுறம் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கோவில் கமிட்டி தலைவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் வினுகுமார்(வயது 37) இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.