கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

குளச்சல் களிமாரில் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Update: 2022-07-29 14:55 GMT

குளச்சல், 

குளச்சல் களிமார் மெயின்ரோட்டில் மகாவிஷ்ணு கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல் வழிபாடு முடிந்ததும் நிர்வாகிகள் பூட்டி விட்டு சென்றனர். இந்தநிலையில் நேற்று காலையில் அந்த வழியாக சென்ற ஒருவர் கோவில் கதவு திறந்து கிடந்ததை பார்த்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார்.

உடனே நிர்வாகிகள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

யாரோ மர்மநபர்கள் இரவு நேரத்தில் கோவிலில் கைவரிசை காட்டியிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கோவில் சார்பில் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை போலீசாரும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்