கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த முத்துநகர் பகுதியில் பட்டாசுக்கு தேவையான மூலப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையை விஸ்வநாதன் (வயது 70) என்பவர் நடத்தி வருகிறார். வழக்கம் போல் இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் அவர் மறுநாள் காலை கடையை திறக்க சென்றார். அப்போது கடையில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்து ரூ. 4 ஆயிரம், எடை எந்திரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.