நல்லம்பள்ளி அருகே ஈச்சம்பட்டி முத்துகவுண்டன் கொட்டாயை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன். இவருடைய மனைவி சிந்து. சம்பவத்தன்று மணிகண்டன் வேலை காரணமாக வெளியூருக்கு சென்று விட்டார். அப்போது இரவு தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் குழந்தையுடன் சிந்து அருகில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 7 பவுன் தங்க நகைகள், ரூ.8 ஆயிரம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிககளை வலைவீசி தேடி வருகின்றனர்.