வீட்டு கதவை உடைத்து திருட்டு

நெய்வேலி அருகே வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

Update: 2022-10-02 18:40 GMT

நெய்வேலி, 

நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சிக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் சிட்டிபாபு. இவருடைய மனைவி தேவிகா (வயது 35). சிட்டிபாபு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் இருந்த தேவிகா வீட்டை பூட்டிவிட்டு நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் தேவிகா வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த ரு.10 ஆயிரம் மதிப்புள்ள கை கடிகாரத்தை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்