தபால் நிலையத்திற்குள் புகுந்து பணம் திருட்டு
தபால் நிலையத்திற்குள் புகுந்து பணம் திருட்டு
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின். இவரது மனைவி வனிதா(வயது 35). இவர் பாளையம்பட்டி தபால் நிலையத்தில் சப் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது, முக கவசம் அணிந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தபால் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் வனிதாவிடம் டாலர் பரிமாற்றம் செய்ய வேண்டும் என ஆங்கிலத்தில் விசாரித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் தடுப்பு கதவை திறந்து அலுவலகத்தின் உள்ளே ெசன்றனர். அப்போது வனிதாவும், தபால் நிலைய ஊழியர்களும் சத்தம் போட்டு அவர்களை வெளியே செல்லுமாறு கூறினர். இதையடுத்து அந்த 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். இந்தநிலையில் வனிதா மேஜையை திறந்து பணத்தை சரிபார்த்த போது அதிலிருந்த பணம் ரூ.84 ஆயிரம் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு பணம் திருடு போனது குறித்து டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தபால் நிலையத்திற்குள் புகுந்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.