கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

நாசரேத் அருகே கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கையை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2022-12-31 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள வெள்ளமடம் கிராமம் வாலசுப்பிரமணியபுரத்தில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இக்கோவிலில் வேலை நடப்பது சம்பந்தமாக கோவிலின் தர்மகர்த்தா வெட்டும் பெருமாள் சென்றார். அங்கு கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா கொடுத்த புகாரின் பேரில், நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்