திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றம்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.
பண்ருட்டி,
பண்ருட்டி திருவதிகையில் புகழ்பெற்ற ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும், வைகாசி மாதம் நடைபெறும், பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி மரத்தின் அருகில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது.
பின்னர் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.